அப்பிச்சிமார் வரலாறு
நான் எழுதிய விக்கிபீடியா பக்கம்: https://ta.wikipedia.org/wiki/அப்பிச்சிமார் இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாழவந்தி நாட்டு பிள்ளைக்கரையாற்றூரில் புதிதாகத் திருமணமான எழுபது வேட்டுவ கவுண்டர் [ 1 ] [ 2 ] சமூக வாலிபப் போராளிகள் , தாரமங்கலம் அருகே ஆவணிப்பேரூரில் ஆண்ட பூவாணிய நாட்டுப் பொத்தி மன்னன் என்ற வேட்டுவருடன் நடந்த போரில், தங்கள் நண்பர்களும், கூட்டாளிகளுமான பூந்துறை நாட்டுக்கவுண்டர்களுக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் . கொமாரபாளையம் ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் சதியில் உடன்கட்டையேறி அர்த்தநாரீசுவரரை அடைந்ததாக அப்பிச்சிமார் காவியம் கூறுகிறது. மசரி அம்மன் மசரி என்ற இசுலாமிய [ 3 ] பெண்ணின் மகன்களான தனுக்காமன், வாதுருகார் (பகதூர் கான்) என்ற இரண்டு சகோதரர்களும் போரில் அப்பிச்சிமாருக்காக இறந்தனர். இதனால் மசரி அம்மனுக்கு பலி பூஜைகள் உண்டு. திங்களூரில் காத்தியவாதியான பூசாரி ஆண்டமுத்துக்கவுண்டரால் மசரி அம்மனுக்கான வடக்கு ...