அப்பிச்சிமார் வரலாறு

 


நான் எழுதிய விக்கிபீடியா பக்கம்:https://ta.wikipedia.org/wiki/அப்பிச்சிமார்

இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாழவந்தி நாட்டு பிள்ளைக்கரையாற்றூரில் புதிதாகத் திருமணமான எழுபது வேட்டுவ கவுண்டர்[1][2] சமூக வாலிபப் போராளிகள் , தாரமங்கலம் அருகே ஆவணிப்பேரூரில் ஆண்ட பூவாணிய நாட்டுப் பொத்தி மன்னன் என்ற வேட்டுவருடன் நடந்த போரில், தங்கள் நண்பர்களும், கூட்டாளிகளுமான பூந்துறை நாட்டுக்கவுண்டர்களுக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் . கொமாரபாளையம் ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் சதியில் உடன்கட்டையேறி அர்த்தநாரீசுவரரை அடைந்ததாக அப்பிச்சிமார் காவியம் கூறுகிறது.

மசரி அம்மன்


மசரி என்ற இசுலாமிய[3] பெண்ணின் மகன்களான தனுக்காமன், வாதுருகார் (பகதூர் கான்) என்ற இரண்டு சகோதரர்களும் போரில் அப்பிச்சிமாருக்காக இறந்தனர். இதனால் மசரி அம்மனுக்கு பலி பூஜைகள் உண்டு. திங்களூரில் காத்தியவாதியான பூசாரி ஆண்டமுத்துக்கவுண்டரால் மசரி அம்மனுக்கான வடக்கு பலிபூஜை வாசல் அடைக்கப்பட்டது. இவ்வழக்கம் நிறுத்தப்பட்டது.

வழிபாடு:

திங்களூர், சிங்காநல்லூர், ஓடப்பள்ளி மற்றும் திடுமல் ஆகிய இடங்களில் உள்ள அப்பிச்சிமார் மடங்கள் எனப்படும் இடங்களில் இந்நாயகர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அறுபது வேட்டுவர்களும் சைவ தெய்வங்களாக இருந்தாலும், முஸ்லிம் மாவீரர்களது தாயான மசரி அம்மனுக்குத் தனியாக மிருகபலி கொடுக்கப்படுகிறது. பூந்துறை நாட்டிலுள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் நாட்டார் மற்றும் வேட்டுவ கவுண்டர்களின் பெருந்தாலி பிரிவைச் சேர்ந்தவர்களாலும் குலதெய்வமாக வணங்கப்படுகின்றனர்.

அப்பிச்சிமார் காவியம்: https://archive.org/details/20241109_20241109_1134


அப்பிச்சிமாரை நாட்டு காவல் தெய்வமாக வணங்கும் வெள்ளாளர், 

அண்ணமாரை காணியாட்சி குல தெய்வமாக வணங்கும் வேட்டுவர்..முழுமை ஆதாரங்களோடு

https://annamarstory.blogspot.com/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html?m=1

வேட்டுவர் வேளாளர் போட்டி, குழப்பங்களை உருவாக்கியது சர்க்காரின் தவறான ஜாதி செர்டிபிகேட்களே!



a.பெருந்தாலி கொங்க வேட்டுவர்,

b. தாலி அணியாக் காவிலியர், c.மாவிலியர் (வலையர் பிரிவு)

குளிசங்கட்டி வேட்டுவர் (வேடர்)


1.

a. கண்ணப்ப நாயனார் தலைமையில் திருஞானசம்பந்தர் காலம் (620 CE) காலத்தில் களப்பிரர்களை அடக்க சேரனால் காளத்தியிலிருந்து குடியமர்த்தப்பட்டவர்கள் பெருந்தாலி கொங்க வேட்டுவர்.


b. சுந்தரர் தேவாரத்தில் பூண்டி 'வடுக வேடுவர்' என வரும் காவிலியர்.


c. மாவிலியர் (வலையர்).

சேரமான் - சுந்தரமூர்த்தி நாயனார்கள் காலத்திற்குப்பின் (825 CE) செட்டி சிவபிராமண ஆட்சியாளர்களான காசிப கோத்திர ஆதி சைவர்களால் களப்பிரர் வம்சமான வீசுங்கைநாட்டுப் பிரான்மலைக் கள்ளரை அடக்க கண்ணப்ப நாயனாரது ஆறாம் தலைமுறைப் பேரன் முத்தணி ராசன் காலத்தில் காளத்தியிலிருந்து குடியேற்றப்பட்டவர்கள்.

2.

a. சேரனின் முத்திராங்கிதமான கொங்கப் பெருந்தாலி அருமைப்பெரியவர் கொண்டு அணிவோர். 


b. மங்கிலியம் அணியா பட்டாலி காவிலியரான அரசம்பாளையம் ஜாதி பட்டக்காரர் உடையோர் காவிலியர்

பாண்டியன் காலத்தில் அளித்த குளிசம் அணிவோர்.

3.

a.வடக்கு தலைவாசல் ஆறுநாட்டில் காணிகள் உடையோர்


b.தெற்கு, மேற்குத் தலைவாசல் ஆறுநாடுகளில் காணிகள் உடையோர்

கரூரைச் சூழ்ந்த கிழக்குத் தலைவாசல் ஆறுநாடுகளில் காணிகள் கொண்டோர்.

4.

a.கீழ்க்கரை அரைய நாட்டு அல்லாள இளையா நாயக்கரைப் பெரிய பட்டக்காரராக உடையோர், பிற நாடுகளில்/காணிகளில் அரண்மனையார் என்ற பட்டக்காரர்கள் வேறாக இருப்பினும், கோட்டைக் காவல் உடையோரான வேட்டுவர்.


b.மங்கிலியம் அணியா பட்டாலி காவிலியரான அரசம்பாளையம் பட்டக்காரர் உடையோர் காவிலியர்

வெங்கல நாட்டு புன்னம் பொத்தி சேசுவராயனையும், பவுத்திரம் காளத்திக்கவுண்டரை பெரிய பட்டக்காரர்களாகக் கொண்டோரான வேடர்.

5.

a.வளவு அருமைக்காரர்களை தனியாக உடையோர் (வேட்டுவர் மட்டும்)

பட்டக்காரர்களையே கொண்டோர்.

6.

a,b தமிழ்நாடு சர்க்காரின் மிகவும் பிற்படுத்தபகபட்டோர் பட்டியலில் 183வதாகவும், மத்திய சர்க்காரின் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் 165வதாகவும்

Vettuva Gounder, வேட்டுவக் கவுண்டர் என குறிப்பிடப்படுவோர்

  1. தமிழ்நாடு சர்க்காரது சீர் மரபினர் (DNC) பட்டியலில் 

232வது ஜாதியாகவும், மத்திய சர்க்காரது பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 155வதாகவும் குறிப்பிடப்படும் Punnan Vettuva Gounder ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts), புன்னம் வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) ஜாதியினர் 


  1. தமிழ்நாடு சர்க்காரது சீர் மரபினர் (DNC) பட்டியலில்

252வதாகவும், மத்திய சர்க்காரது பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) 165வதாகவும் Vettuva Gounder (Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts), வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) குறிப்பிடப்படும் ஜாதிகள்

7.

a.நற்குடி 8000 வெள்ளாளர் படையை சோழனுக்காக நடத்திவந்த அண்ணமாரை குலதெய்வமாக வெள்ளோடு, எழுமாத்தூர், நடந்தை முதலான பல ஊர்களில் வணங்குவோர். எழுமாத்தூர் போன்ற ஊர்களில் அண்ணமார் கோயில் பூசாரிகளாகவும் உள்ளோர்.

நற்குடி 8000 வெள்ளாளர் படையை சோழனுக்காக நடத்திவந்த அண்ணமாரை தங்களது பரம விரோதியாகப் போரிட்டோர். தலையூர் காளி இவ்வினத்தின் தலையநாட்டுப் படடக்காரர ஆவார். வெங்கல நாட்டார் மட்டும் வரம் "வெட்ட வெட்டத் தழையும் வெற்றி வெங்கல நாடு" என மாயவர் அருளால் பொன்னர் வரம் பெற்றோர்.

8.

எக்காலத்திலும் குற்றப்பரம்பரை சட்டத்தின்படி (CTA) குற்றப்பரம்பரைகளாக அறிவிக்கப்படாதோர்.

குற்றப்பரம்பரைச் சடத்தின்படி அறிவிக்கப்பட்டிருந்தோர் (CT, DNT) .

9.

a.வடக்குத்தலைவாசல் ஆறுநாட்டு வடக்கத்தி பெருந்தாலி வேட்டுவர் என்று பெயர்கள் கொண்ட தனி வேட்டுவர் ஜாதியும்,


b.மேற்கு, தெற்கு தலைவாசல் மங்கிலியமில்லா காவிலிய வேட்டுவரான பட்டாலி அரசம்பாளையம் பட்டக்காரர் தலைமையிலான காவிலியரும்.

குளிசங்கட்டி, குடிசைகட்டி, குளிசம், கிழக்கத்தி வேட்டுவர் என பெயர்கள் பெற்றோர்.


வெஞ்சமாக்கூடல் சுந்தரர் தேவாரத்தில் வேடர் எனப்படுவோர்.


"வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.  8 "

10.

a.பெருந்தாலி வேட்டுவரான அப்பிச்சிமாரை கொங்க வெள்ளாளரில் பூந்துறை கிளை நாட்டார் உள்ளிட்ட பலர் தங்களது குலதெய்வங்களாக் கொண்டுள்ள்னர்.

ஏதும் இல்லை.

 

முத்துசாமிக்கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில் அப்பிச்சிமார் பற்றி:


மசரி அம்மன் சிறப்பும், திங்களூர் மடத்தின் நிலையும:

திங்களூரில், எல்லா மசரியம்மன் கோயில்கள் போலவே மசரி அம்மனுக்கான தனி பலிபூஜை வாசல் உள்ளது:
மசரி, திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடும் 9 சிவ ஆகமங்களுள் ஒன்றான சாக்த ஆகமமான யாமளத்தின்படி பலி பூஜைகள் உடையவள் ஆவாள்: https://archive.org/details/20241109_20241109_1134/page/n117/mode/1up


யாமளம் பற்றிய எனது தளம்: 




 இதனால் மடப்பூஜைக்கு உள்ளவர் ஆசார்ய அபிஷேகம், தீக்ஷா குருவான குலகுருவான சைவசித்தாந்தரான பட்டையக்காளிபாளையம் மடாதிபதியால் (https://kongukulagurus.blogspot.com/2009/09/52_1.html?m=1) நடத்தப்பட்டாலும், பூசாரி இறந்தவுடன் பட்டத்தை இறக்க சாக்த யாமள பூசாரியான ஸ்தலத்து, காளிகோயில் பண்டாரமே மோக்ஷ குருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாத்திகமான சமண மதத்தவளான புத்லிபாய் மகன் காந்தியின் சீடரான பூசாரியாக ஆண்டமுத்துக்கவுண்டர் வாழ்ந்த காலத்தில் கட்டாயப்படுத்தி மசரி அம்மனது பலி வாசலான வடக்குவாசல் யாமள ஆகம விரோதமாக அடைக்கப்பட்டது:

பக்தர்கள் குறைதீர்க்க தோஷம், தாங்க நேர்ந்துவிடப்படும் மசரி அம்மனது சொத்தாகிவிட்ட ஆன்மாக்களான ஆடு, கோழி ஆகியவற்றை மடத்தரே கசாப்புக்கு வெளியில் விற்கும் பணத்திற்கு அவல நிலையையும் சமண காந்தி வழி சென்ற ஆண்டமுத்துக்கவுண்டர் ஏற்படுத்தி, மடத்தின் சக்தியாகிய மசரி பட்டினி போடப்பட்டதால், மட பூஜைகளை செய்ய இயலாதவாறு நின்றுள்ளது.

சமண களப்பிரனான அச்சுத களப்பாளனை ஒழித்துத் தமிழ் கூறும் நல்லுலகை மீட்ட சைவப்பேரொளியான, இறைவனுக்கே சுட்டிறைச்சி படைத்த கண்ணப்ப நாயனாரது வேட்டுவக்கவுண்ட வம்சமே காந்தி சமணத்தின் அடிமையானதே மடப்பூஜைகள் நின்று மடத்தார் அருகி வருவதன் காரணம்: https://kongukulagurus.blogspot.com/2009/09/52_1.html?m=1

இதனை நான் அப்பிச்சிமாரால் உயிர்நீத்துப் பாதுகாக்கப்பட்ட பூந்துறை நாட்டுக்கவுண்டர்களது  ஒரு வாரிசு என்ற விதத்தில், அனைத்து மட வாரிசுகளுக்குச் சொல்லியும், ஆகம ரீதியாக விளக்கியும், மடாதிபதிகளிடம் அழைத்துச்சென்று உளமுடையான் ஏடுகளில் பார்த்துக்கூறியும், அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டியால் பின்வாங்குகின்றனர்:


 திருச்செங்கோடு அர்த்தனாரீஶ்வரரே அருள வேண்டும்.






Comments